பாகுபலியாக மாறிய 40 கோடி இந்தியர்கள்... பிரதமர் மோடி கூறிய மாஸ் தகவல்..!

Published : Jul 19, 2021, 11:01 AM ISTUpdated : Jul 19, 2021, 11:04 AM IST
பாகுபலியாக மாறிய 40 கோடி இந்தியர்கள்... பிரதமர் மோடி கூறிய மாஸ் தகவல்..!

சுருக்கம்

தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போல உருவாக வேண்டும். இன்று வரை, 40 கோடி மக்கள் கொரோனாவுக்கு எதிராக போரில் பாகுபலியாக மாறியுள்ளார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போல உருவாக வேண்டும் என பிரதமர் மோடி, மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதனிடையே அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். இதில் வேளாண் சட்டங்கள், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. டெல்லியில் பலத்த மழை பெய்து வருவதால் நாடாளுமன்றம் முன்பு மழையில் குடை பிடித்துக்கொண்டே பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எதிர்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு கூறும் விளக்கங்களை எதிர்கட்சியினர் கேட்க தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போல உருவாக வேண்டும். இன்று வரை, 40 கோடி மக்கள் கொரோனாவுக்கு எதிராக போரில் பாகுபலியாக மாறியுள்ளார்கள்.’’ என அவர் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?