திருப்புமுனை : பாலியல் புகாரில் சிக்கும் 4 அமைச்சர்கள்...! ஆதாரத்துடன் வெற்றிவேல்..?

Asianet News Tamil  
Published : Apr 19, 2018, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
திருப்புமுனை : பாலியல் புகாரில் சிக்கும் 4 அமைச்சர்கள்...! ஆதாரத்துடன் வெற்றிவேல்..?

சுருக்கம்

4 MINISTERS GOING TO BE IDENTIFIED SAID VETRIVEL

திருப்புமுனை: பாலியல்  புகாரில் சிக்கும் 4 அமைச்சர்கள்...! ஆதாரத்துடன் வெற்றிவேல்..?

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி  மாணவிகளை  பாலியலுக்காக வற்புறுத்தி பேசும் ஆடியோ வைரலாக பரவியது

இதன் விளைவாக எழுந்த  புகாரின் பேரில், அதிகார பலம் மிக்க பலரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சமயத்தில் ஒரு திருப்பு முனையாக,தகுதி நீக்கம்  செய்யப்பட்ட  டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்  ஒரு புதிய  புகாரை முன் வைத்து உள்ளார்

இது தொடர்பாக வெற்றி வேல் தெரிவித்தது

4 அமைச்சர்கள் மீதான பாலியல் ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்று திடீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மீதும் பாலியல் புகார் உள்ளது. அது தொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளிவரும் என  தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே நிர்மலா  தேவி  விவகாரம் தலை விரித்தாடும் நிலையில், விசாரணை ஒரு பக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில், இதற்கு பின்னணியாக உள்ள  அதிகாரிகள் யார்  யார் என்பதை  கண்டறிய தீவிர விசாரணை  நடைப்பெற்று வருகிறது

இந்நிலையில் வெற்றிவேல் முன்வைத்துள்ள  நான்கு அமைச்சர்கள் மீதான  குற்றச்சாட்டால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?