அப்படிப்போடு..! திமுக தேர்தல் அறிக்கையில் "ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நச்சுன்னு 4 அம்சம்"..!

By ezhil mozhiFirst Published Mar 19, 2019, 2:41 PM IST
Highlights

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதிலும் மும்முரமாக உள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளும் அமைந்து விட்டது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதிலும் மும்முரமாக உள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளும் அமைந்து விட்டது. இந்த  நிலையில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் மக்கள் மனதை கவர்ந்த சில அறிவிப்புகள் இதுதானாம்..! 

தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூபாய் 8000 என நிர்ணயிக்கப்படும்.

நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைத்திருக்கும் விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய தொகை வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு முன்பிருந்தது போல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

தற்போது உள்ள வருமான வரிக்கான வரம்பு ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள்,மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு இந்த வரம்பு ரூபாய் 10 லட்சமாக உயர்த்தப்படும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் முற்றிலுமாக வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

சரக்கு மற்றும் சேவை வரி அதிகபட்சம் 28 சதவிகிதம் வரை இருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பை போக்கிட ஜிஎஸ்டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.

சிறு குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மருத்துவ கல்லூரிகளில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு களுக்கு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். 

பத்தாம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமபுர பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவர். கிராம பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூபாய் 50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.

நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்கவரி வசூல் உரிமை முடிந்த பின்னரும் வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும் 

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களான மதுரை திருச்சி கோயம்புத்தூர் சேலம் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணத்தை முந்தைய அளவு போன்றே குறைக்கப்படும். மேற்குறிப்பிட்ட சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

click me!