13 நகரங்களில் தமிழகத்தில் 4 ஊர்களில் உச்சபட்ச ஊரடங்கு... இதற்கு மட்டும் தளர்வா..? மத்திய அரசு முடிவு..!

By Thiraviaraj RMFirst Published May 30, 2020, 1:49 PM IST
Highlights

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள 13 நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள 13 நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஊரடங்கு நீட்டிப்பு, சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு நீட்டிப்பு, சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட நாடு முழுவதும் 13 நகரங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கை மேலும் நீடிப்பது குறித்து மத்திய- மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. டில்லி, மும்பை, புனே, தானே, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கொல்கத்தா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாடுமுழுவதும் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% மக்கள் இந்த 13 நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

எனவே இந்த 13 நகரங்களில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ஊரடங்கை முடிவு செய்ய அம்மாநில முதல்வர்களிடமே பொறுப்பை ஒப்படைத்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த 13 நகரங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் விதித்துள்ள எந்த விதிகளையும் தளர்த்தப் கூடாது என்று மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை ஐந்தாம் கட்ட ஊரடங்கிலும் நீடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன

click me!