தொகுதிக்கும் போவதில்லை... நாடாளுமன்றத்துக்கும் வருவதில்லை...!! ஆப்சென்ட் மேல் ஆப்சென்ட் ஆகும் எம்பிக்கள்...!

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2020, 1:54 PM IST
Highlights

கடந்த ஆண்டு வரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லது தொடர்ச்சியாக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது .  அது  நடப்பாண்டில்  106 ஆக உயர்ந்துள்ளது . இதில் 28 பேர் ராஜ்யசபாவைச் சேர்ந்தவர்கள் ,  78 பேர் லோக்சபாவை சேர்ந்தவர்கள் .  

244 எம்பிக்களின் 95 பேர்  நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை  என ராஜ்யசபா  தலைவர் வெங்கையா நாயுடு தகவல் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இரண்டாவது அமர்வு நேற்று கூடியது,    இதில் பேசிய ராஜ்யசபா  தலைவர் வெங்கையா நாயுடு அவையில் மொத்தமுள்ள 244  எம்பிக்களின் 95 பேர் அதாவது 39 சதவீதத்தினர்  நாடாளுமன்ற நிலைக்குழுவின் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்றார். 

அதாவது கடந்த 1993-ம் ஆண்டு துறைரீதியான நாடாளுமன்ற நிலைக் குழு உருவாக்கப்பட்டது .  இதில் அனைத்துக் கட்சி  உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர் ,  இதில் நாடாளுமன்றம் எப்படியெல்லாம்  சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு விஷயங்கள் பற்றி முடிவு எடுக்கப்படும் .  அத்தகைய கூட்டங்களில் எம்பிக்கள் பங்கேற்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது .  கடந்த ஆண்டு வரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லது தொடர்ச்சியாக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பவர்களின்  எண்ணிக்கை 100 ஆக இருந்தது .  அது  நடப்பாண்டில்  106 ஆக உயர்ந்துள்ளது . இதில் 28 பேர் ராஜ்யசபாவைச் சேர்ந்தவர்கள் ,  78 பேர்  லோக்சபாவை சேர்ந்தவர்கள் .  

இந்த தகவலை வெளியிடுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை உருவாக்கி நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும்  மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் .  மேலும் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் அனைவரும் தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் ,  நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.   என அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வெங்கையா நாயுடு வேண்டுகொள் விடுத்துள்ளார். அதேபோல் வெறும்  28 பேர் மட்டுமே பூஜ்ஜியம் வருகையை கொண்டிருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

click me!