பொய் சொல்லி பாஸ் வாங்கி சென்றவர்கள்... 35 பேர் கொரோனா வார்டில் அனுமதி..!! தூத்துக்குடியில் பரபரப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published May 2, 2020, 6:38 PM IST
Highlights

அதேபோல் சென்னை தாம்பரத்தை சேர்ந்த 8 பேர் தங்களது சொந்த ஊரான எட்டயபுரத்தில்  உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் அவரை உடனே போய் பார்க்க வேண்டும் என கூறி அன்றிரவு காரில் புறப்பட்டுச் சென்றனர் ,

நாளை மறுநாள்  திருமணம் நடக்க இருந்த நிலையில் சென்னையிலிருந்து சென்ற மணமக்கள் உட்பட   35 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தூத்துக்குடியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  நேற்று ஒரே நாளில்  203 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால்  மாநிலத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது ,  இது தமிழகத்தின் அதிக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது , கொரோனா பாதிப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் சிவப்பு மண்டலம் ஆரஞ்சு மண்டலம் பச்சை மண்டலம் என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது . மொத்தம் 12 மாவட்டங்கள் சிவப்புநிற மண்டலமாகவும் ,  24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது . 

இதில் சென்னை மதுரை நாமக்கல் தஞ்சாவூர் செங்கல்பட்டு திருவள்ளூர் திருப்பூர் ராணிப்பேட்டை விருதுநகர் திருவாரூர் வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்புநிற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன ,  இதில் தென்காசி நாகப்பட்டினம் திண்டுக்கல் விழுப்புரம் கோயம்புத்தூர் கடலூர் சேலம் கரூர் தூத்துக்குடி திருச்சி கன்னியாகுமரி திருவண்ணாமலை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன ,  இந்நிலையில்  மாநிலத்திலேயே கொரோனாவில் அதிகம் பாதித்த பகுதியாக சென்னை உள்ளது இங்கு மட்டும் சுமார் 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .   இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியை சேர்ந்த சிலர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர் ,  இவர்களின் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சொந்த ஊரான எட்டயபுரத்தில் நாளை மறுதினம் அதாவது வரும் திங்கட்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .  

இதைத்தொடர்ந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 27 பேர் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று ஒரு வேன் மற்றும் காரில் நேற்று முன்தினம்  இரவில் எட்டயபுரம் புறப்பட்டனர் ,  அதேபோல் சென்னை தாம்பரத்தை சேர்ந்த 8 பேர் தங்களது சொந்த ஊரான எட்டயபுரத்தில்  உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் அவரை உடனே போய் பார்க்க வேண்டும் என கூறி அன்றிரவு காரில் புறப்பட்டுச் சென்றனர் ,  இந்நிலையில் நேற்று காலையில் சென்னையில் இருந்த சென்ற  ஒரு வேன் இரண்டு காரில் வந்தவர்களை எட்டையபுரம் சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் அவர்கள் குறித்து  மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் .  இதையடுத்து அந்த வாகனங்களில் இருந்த மணமக்கள் உள்ளிட்ட 35  பேரும் எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

click me!