முதல் கட்டமாக 35 வேட்பாளர்கள் அறிவிப்பு... முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்து கெத்து காட்டும் சீமான்..!

By Asianet TamilFirst Published Jan 22, 2021, 8:51 PM IST
Highlights

தமிழகத்தில் முதல் கட்சியாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. மேலும் தமிழகம் முழுவதும் 50 சதவீத தொகுதிகளில் பெண்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அக்கட்சி அறிவித்தது. தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுகவில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையே இன்னும்  தொடங்கவில்லை. ஆனால், தமிழகத்தில் முதல் கட்சியாக நாம் தமிழர் முதல் கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டது.


இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சீமான் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இந்த விழாவில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அடுத்த கட்டமாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
 

click me!