தமிழக எம்.எல்.ஏ.க்களை ஆட்டிப் படைக்கும் கொரோனா... இதுவரை 31 பேருக்கு தொற்று!!

By Asianet TamilFirst Published Aug 11, 2020, 9:07 AM IST
Highlights

தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களை கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. இதுவரை 31 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பகழன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜூன் 10 அன்று மரணமடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ.வும் ஜெ. அன்பழகன்தான். அதன்பிறகு திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கொரோனா  தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தத் தொற்றுக்கு அமைச்சர்களும் விதிவிலக்கில்லாமல் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜு, தங்கமணி, நிலோஃபர் கபில் என 4 அமைச்சர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள்.

 
அதிமுக எம்.எல்.ஏ.க்களான சதன் பிரபாககர் (பரமக்குடி), பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), அம்மன் அர்ச்சுணன் (கோவை தெற்கு) உள்பட  அதிமுகவில் 14 பேர் ஏற்கனவே கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தர். தற்போது மதுரை தெற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சரவணனும் தொற்று உறுதியாகியுள்ள. இதன் மூலம் அதிமுகவில் 15 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவிலும் கொரோனா தொற்று ஆட்டிப் படைத்துவருகிறது. கணேசன் (திட்டக்குடி), மஸ்தான் (செஞ்சி), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்) உள்பட 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். புதிதாக குளித்தலை எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திமுகவில் 15 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவரையும் சேர்த்து மொத்தம் 31 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 

click me!