தொடங்கியது அதிமுக பிரச்சாரம்! 3000 இளைஞர்கள் அதிரடி பிரச்சாரம்!

Published : Sep 08, 2018, 06:41 PM ISTUpdated : Sep 09, 2018, 08:14 PM IST
தொடங்கியது அதிமுக பிரச்சாரம்! 3000 இளைஞர்கள் அதிரடி பிரச்சாரம்!

சுருக்கம்

அதிமுகவின் எஃகு கோட்டை திருப்பரங்குன்றம் என்றும், இரட்டை இலை சின்னத்தை பார்த்து பழகியவர்கள்தான் இத்தொகுதி மக்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுகவின் எஃகு கோட்டை திருப்பரங்குன்றம் என்றும், இரட்டை இலை சின்னத்தை பார்த்து பழகியவர்கள்தான் இத்தொகுதி மக்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பான பிரச்சாரம் தொடங்கியுள்ளதாக கூறினார்.

அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பான தேர்தல்களில் அதிமுகதான் வெற்றி பெற்றிப்பதாக கூறினார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள், இரட்டைஇலை சின்னத்தைப் பார்த்து பழகியவர்கள் என்றார். இந்த பிரச்சாரத்தில் மூவாயிரம் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

டிரம்பின் மூக்கை அறுத்த ஈரான்..! - அமெரிக்காவின் கண்முன்னே வேட்டை..!
முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!