கூட்டமே இல்லாத அரங்கில் உரையை நிகழ்த்திய ஓபிஎஸ்... அரை மணிநேரம் பேசி அமைச்சரை வெச்சு செஞ்ச தரமான சம்பவம்!

By sathish kFirst Published Sep 8, 2018, 4:22 PM IST
Highlights

சமீபத்தில் வேலூரில் வைத்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தின் போது பன்னீர்செல்வத்தை கடுப்பாக்கி இருக்கிறார் கே.சி.வீரமணி. அதிமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஒன்று வேலூரில் வைத்து கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. 

சமீபத்தில் வேலூரில் வைத்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தின் போது பன்னீர்செல்வத்தை கடுப்பாக்கி இருக்கிறார் கே.சி.வீரமணி. அதிமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஒன்று வேலூரில் வைத்து கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டிருக்கிறார். அமைச்சர் தங்கமணி, கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி என அதிமுக முக்கியப்புள்ளிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தின் போது, கே.சி.வீரமணி தான் வரவேற்புரை ஆற்றி இருக்கிறார். அப்போது தொண்டர்கள் ‘அண்ணன் வீரமணி வாழ்க’ என கோஷம் எழுப்பி இருக்கின்றனர். 

அதை கேட்டு மகிழ்ச்சியுடன் சிரித்த வீரமணி , நிலமையை புரிந்து கொண்டு அண்ணன் ஓபிஎஸ் இருக்கிறார் அமைதியாக இருங்கள் என கூறி இருக்கிறார். அதன் பிறகு கூடுதலாகி இருக்கிறது இந்த கோஷம். இதனால் கடுப்பாகி இருக்கிறார் பன்னீர்செல்வம். அதன் பிறகு அமைதி காத்த தொண்டர்கள், வரவேற்புரையை ரசித்து கேட்டுவிட்டு, கே.பி.முனுசாமி பேச ஆரம்பிக்கவும் கலைந்து செல்ல துவங்கி இருக்கின்றனர். 

தொடர்ந்து ஓபிஎஸ் பேசும் போது சுத்தமாக கூட்டமே இல்லை எனும் அளவிற்கு ஆகி இருக்கிறது அரங்கம். ஆரம்பத்திலேயே அவர்களின் கோஷத்தால் கடுப்பாகி இருந்த ஓபிஎஸ்க்கு, இது மேலும் தர்மசங்கடமான சூழலாகி இருக்கிறது. கடைசியில் கூட்டமே இல்லாத அரங்கில், தான் தயாரித்து வந்த உரையை நிகழ்த்த தொடங்கி இருக்கிறார்.  

அதிமுகவில் தான் நடத்திய தர்மயுத்தம் பற்றி அரைமணி நேரத்திற்கும் அதிகமாக பேசிய ஓபிஎஸ், பேசி முடிக்கும் போது “இது போல தொண்டர்களின் கூட்டத்தை நான் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை. அவ்வளவு பெரிய கூட்டத்தை அமைச்சர் வீரமணி சேர்த்திருக்கிறார் “ என குத்தலாக பேசி இருக்கிறார்.

இதை கேட்டதும் பதறிப்போன வீரமணி உடனடியாக எழுந்து வந்து முன்னால் நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களையும், புகைப்படகலைஞர்களையும் பார்த்து ,” நீங்க இப்படி மறைத்து கொண்டு நின்றதால் தான் , மேடை தெரியாமல் தொண்டர்கள் எழுந்து போய் விட்டார்கள்” என பழியை தூக்கி போட்டு சமாளித்திருக்கிறார்.

click me!