இந்த செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. நிவாரணம் அறிவித்த கையோடு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்

By vinoth kumar  |  First Published Mar 10, 2023, 1:39 PM IST

அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி ரூ. 3 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ளார்.


அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி ரூ. 3 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6.3.2023 அன்று 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்றும் இவர்களில் 4 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதில் செல்வி. ஜெய்பா பாத்திமா. த/பெ.முகமது சலீம் என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- உஷார்.. போட்டா போட்டி.. சத்து மாத்திரைகள் அதிகம் சாப்பிட்ட பள்ளி மாணவி.. கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.!

மேலும் இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வி நாசஜியா, த.பெ.ஜயாவுல்லா, செல்வி ஆயிஷா, த/பெ.சர்புதீன் மற்றும் செல்வி. குல்தூண் நிஷா தபெ முகமது உசேன். ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இதையும் படிங்க;-  மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா.. பாதிப்பு எண்ணிகை உயர்வு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்.!

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

click me!