கூட்டணி உள்குத்து..! சென்னைக்கு 3 துணை மேயர்கள்? திமுக மாஸ்டர் பிளான்...

By manimegalai aFirst Published Feb 26, 2022, 10:16 AM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவிலான வெற்றி பெற்றது சென்னை மாநகராட்சி பொருத்தவரை திமுக 153 இடங்களையும் அதிமுக 15 இடங்களில் கைப்பற்றியது

 பெரிய வெற்றி காரணமாக துணை மேயராக யாரை நியமிப்பது என்பதில் திமுகவில் குழப்பமான  நிலைதான் நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளும் துணை மேயர்  பொறுப்புகளை கேட்டு வருகிறது. எனவே சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதை மூன்றாக பிரித்து மூன்று துணை மேயர் பதவிகள் உருவாக்கலாமா என   திமுக திட்டமிட்டு வருகிறது.

இதன் காரணமாக தங்களுக்கு தான் துணை மேயர் பொறுப்பு கிடைக்கும் என்று திமுகவில்  வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கனவில் காத்துக் கொண்டுள்ளனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் சென்னையில் ஒரு துணை மேயர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே துணை மேயர் பொறுப்புகளை நியமிப்பது தொடர்பாக திமுக தலைமை  மாவட்ட செயலாளரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது தங்கள் பகுதியில்  வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் கொண்ட பட்டியலை உடனடியாக தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையை  பொருத்தவரைக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் கவுன்சிலராக தனசேகரன் வெற்றி பெற்றுள்ளார், இதே போல  சிற்றரசு, மதன் மோகன், இளைய அருணா ஆகியோர்களின்  பெயர்களும் துணை மேயர் பதவிக்கு அடிபடுகிறது. 
ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண் தான் என அறிவிக்கப்பட்டுள்ளதால், துணை மேயர் களாக மூன்று ஆண்களை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள்  துணை மேயர் பதவிக்கு போட்டிபோட்டு வருவதாகவும் திமுக தலைமை கழக நிர்வாகிகளிடம் சிபாரிசு செய்யுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது சென்னையில் மட்டும் 200 வார்டுகள் உள்ளதால் மூன்றாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது இதேபோல கோவை, திருச்சி,மதுரை  உள்ளிட்ட மற்ற மாநகராட்சிகளிலும் மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப துணை மேயர் பதவியிடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் துணை மேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகளுக்கும் துணை மேயர் பதவிகளை வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

துணை மேயர் பதவியிடங்களை விரிவு செய்வதன் மூலம்  மக்கள் பிரச்சனைகளை விரைந்து செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும் என திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.  மக்களும் துணை மேயர்களை எளிதாக சந்தித்து தங்கள் பகுதி பிரச்சனைகளை  கூறி நிவர்த்தி செய்ய வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.துணை மேயர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்கள் பணிகளை துரிதமாக செய்ய வழி ஏற்பட்டாலும், துணை மேயர் பதவியிடங்களை கேட்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பதவியிடங்களை கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது . இந்த விவகாரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

அதே நேரத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கு  திமுக கவுன்சிலர்களின் மோசமான நவடிக்கையே காரணம் என கூறப்பட்ட்து. கட்டப்பஞ்சாயத்து,நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் திமுகவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கொடுத்தது. இதனை முதலமைச்சரும் உணர்ந்துள்ளார். இதற்காகத்தான் கவுன்சிலர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே எதுவாக இருந்தாலும் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேர்வழியில்  செயல்படுவார்களா அல்லது தேர்தலில்  செலவழித்த பணத்தை எடுப்பதற்கு குறுக்கு வழியில் செல்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக கவுன்சில்ரகளின் நடவடிக்கையே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு தொடருமா இல்லையா என்பது தெரியவரும்.

click me!