முதல்வர் ஸ்டாலினுக்கு 1000 ரூபாய் அனுப்பிவைத்த 2 ஆம் வகுப்பு மாணவன்.. கொரோனாவுக்கு பயன்படுத்த வேண்டுகோள்..

By Ezhilarasan BabuFirst Published May 8, 2021, 12:38 PM IST
Highlights

மதுரை  ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன், தான் சேர்த்து வைத்த  பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை  வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி  வைத்துள்ள தோடு முதல்வருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். 

தாம் சேர்த்து வைத்த 1000 ரூபாய் பணத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சிறுவன் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 898 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்தை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 24, 871 பேரும்,  அதில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 27 பேர் என 24 ,898 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் மேலும் 6,679 போருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,291  பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 6,678 ஆக அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி அன்றாடம் அதன் வேகம் பன்மடங்கு உயர்ந்து வரும் நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோயில்லாந 45 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி கொரோனாவில் கொடூரம் தீவிரமாக உள்ளது. அதில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் முன்வந்து நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் தாம் சேர்த்து வைத்த 1000 ரூபாய் பணத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சிறுவன் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் நெக்ழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனுடன் அந்த சிறுவன் எழுதியுள்ள கடிதத்தில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை  ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன், தான் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை  வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி  வைத்துள்ள தோடு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களை  காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

click me!