ஜெட் வேகத்தில் தமிழக அரசு.. காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published May 8, 2021, 12:11 PM IST
Highlights

காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு PPE கிட் என்றழைக்கப்படும் பாதுகாப்பு கவச உடை, கையுறை, கிருமிநாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவிட்டுள்ளது. 

காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு PPE கிட் என்றழைக்கப்படும் பாதுகாப்பு கவச உடை, கையுறை, கிருமிநாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 898 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்தை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 24 ஆயிரத்து 871 பேரும்,  அதில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 27 பேர் என 24 ஆயிரத்து 898 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  

சென்னையில் மேலும் 6,679 போருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,291  பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 6678 ஆக அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி அன்றாடம் அதன் வேகம் பன்மடங்கு உயர்ந்து வரும் நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோயில்லாந 45 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி கொரோனாவில் கொடூரம் தீவிரமாக இருந்தது இந்நிலையில், அதில் இருந்து மக்களை அதிகாரிகள் காவல்துறையினரை, முன்கள பணியாளர்களை காப்பதில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு PPE கிட் என்றழைக்கப்படும் பாதுகாப்பு கவச உடை, கையுறை, கிருமிநாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக காவலர்களுக்கு முககவசம் மட்டுமே வழங்கி வந்த நிலையில் தற்போது அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவதற்காக ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. ஞாயிறு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவைகள் தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. எனவே காவலர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்காக இந்த தொகையை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

click me!