திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்.எல். ஏ. மகனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டு பணிப்பெண், பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுகவின் ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
2ஜி விவகாரத்தில் DMK Files தொடர்பான அனைத்து டேப்களும் 3 வாரத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர்செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் தமிழகம் வருகிறார். இது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது. அயோத்தி ராமர் கோயில் குறித்து பேசுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. இடிப்பது பற்றி பேச உதயநிதிக்கு திமுகவிற்கு தகுதியில்லை.
இதையும் படிங்க;- வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைப்பதா? கருணாநிதி குடும்பத்திற்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்
திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்.எல். ஏ. மகனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டு பணிப்பெண், பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுகவின் ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.
ஆளுநர் என்பது மாநில அரசு சொல்வதெல்லாம் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்க முடியாது. அரசியலமைப்பு சட்டதிற்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டுமே என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. வரம்பு மீறி செயல்பட்டதாக சொல்லவில்லை. முதல்வர் கண்ணாடி முன் நின்று அவர்கள் மீதுள்ள தவறுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் 2ஜி வழக்கு. டேப் க்கு திமுகவினர் பதில் சொல்ல வேண்டும். குடும்பத்தில் பிறந்தால் தான் தலைவன் என்பது திமுக. அவர்களுக்கு பாஜக பற்றி புரியாது என்றார்.
இதையும் படிங்க;- ஓடாத காளை.. என்னது அண்ணாமலை முதல்வரா? அது நடக்காதா விஷயம்.. பங்கம் செய்யும் ஜெயக்குமார்..!
மேலும் பேசிய அண்ணாமலை முதல்வர் கனவில் நான் இல்லை. கட்சியை வளர்ப்பது தலைவர்களை உருவாக்குவது மட்டுமே எனது முதன்மையான பணி. இதை பதவி ஆசை பிடித்த சில கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் கொள்கைக்காக இருக்கிறோம். பதவிக்காக இல்லை. என்னைவிட திறமையான தகுதியான பல தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். பாஜகவில் ஒரே தலைவர் என்பதற்கு இடமில்லை. மக்களைதத் தேர்தல் பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும். மீண்டும் மோடி பிரதமராவார். அடுத்த 3 வாரங்களில் அனைத்து டேப்பும் வெளியிடப்படும் என திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.