கொஞ்சம் வெயிட் பண்ணா நீதி வெல்லும்! ஆ.ராஜாவை சிறைக்கு தள்ள துடிக்கும் ஹெச்.ராஜா!

 
Published : Dec 21, 2017, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
கொஞ்சம் வெயிட் பண்ணா நீதி வெல்லும்! ஆ.ராஜாவை சிறைக்கு தள்ள துடிக்கும் ஹெச்.ராஜா!

சுருக்கம்

2G case - BJP H.Raja opinion

2-ஜி வழக்கில், சிபிஐ மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழ ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான
ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 

பின்னர் இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி
உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. 

இந்த தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர், தமிழிசை, நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 2ஜி தீர்ப்புக்கு எதிராக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, குன்கா தீர்ப்பை கொண்டாடியவர்கள் உண்டு. குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களைப் பார்த்தோம். இறுதியி உச்சநீதிமன்றத்தில் நீதி வென்றது. 2-4 வழக்கில் சிபிஐ அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய
வேண்டும்.

உச்சநீதிமன்றம், உரிமங்களை ரத்து செய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம். சிஏஜி அறிக்கை வந்தது, உச்சநீதிமன்றம் 2-ஜி உரிமங்களை ரத்து செய்தது, 2011-ல் இந்த வழக்கு தொடரப்பட்டது. அனைத்தும் நடந்தது காங்கிரஸ் ஆட்சியின்கீழ். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் ரீதியாக பாஜக சிப்பல், சிதம்பரம், MMS குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனமானதாகும் என்று கபில் சிபில், மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சாடி பதிவு செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!