BREAKING கண் கலங்கியும் திமுகவை விட்டுக்கொடுக்காத KS.அழகிரி.. இறங்கி வந்து கவுரமான தொகுதியை ஒதுக்கிய ஸ்டாலின்

By vinoth kumarFirst Published Mar 7, 2021, 10:04 AM IST
Highlights

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து இழுபறி நீடித்த வந்த நிலையில் தற்போது  சுமுகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து இழுபறி நீடித்த வந்த நிலையில் தற்போது  சுமுகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி பங்கீடு கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிக்கும், திமுக சொன்ன தொகுதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது. இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எந்தக் காலத்திலும் சந்தித்தது இல்லை என செயற்குழுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கிக் கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை கேள்விக்குள்ளாகியது என்கிற கருத்து பரவலாகப் பேசப்பட்டது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளுக்கு மேல் தருவதில்லை என்பதில் திமுக பிடிவாதம் காட்டுவதால் தொடர்ந்து இழுபறி நீடித்தது. 54 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க 18 தொகுதிகள் என திமுக நிற்க, பேச்சுவார்த்தை இழுபறியானது. இதனால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு காங்கிரஸ் குழுவை பேச்சுவார்த்தைக்கு நேரடியாக வருமாறு அழைத்தார். அதை தொடர்ந்து நேற்றிரவு திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 

இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், ஒரு மாநிலங்களவை சீட் தரும்படி காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!