களத்தில் இறங்க உள்ள 25 புது முகங்கள்...! பட்டய கிளப்பும் பாஜக..!

By ezhil mozhiFirst Published Apr 17, 2019, 4:16 PM IST
Highlights

மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன 

மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன 

தேர்தலை முன்னிட்டு 12 மாநிலங்களில் 35 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கடந்த 2014ஆம் ஆண்டு கூடிய மக்களை விட  இந்த தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தின் போது கூடிய மக்கள் தொகை அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.

அந்த அளவிற்கு மீண்டும் மோடி மீதான நம்பிக்கை மக்களுக்கு அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள மக்களின் மன நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்து அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் உடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் மோடி.

அதுமட்டுமல்லாமல் மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என பிரதமர் மோடியும் அனைத்து பிரச்சாரத்திலும் நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.இந்நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் புதிய அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் இளைஞர்களையும் புதுமுகங்களையும் கொண்டு வர முடிவு செய்துள்ளாராம் மோடி.

அமித்ஷாவை பொறுத்தவரையில் கட்சித் தலைவராகவே நீடிக்க உள்ளதாகவும், சுஷ்மா அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப் பட வாய்ப்பு உள்ளது என்றும், அருண்ஜெட்லிக்கு நிதித்துறைக்கு பதிலாக வேறு துறையை ஒதுக்கப்படலாம் என்றும், நிதித்துறைக்கு பியூஸ் கோயலும், ராணுவ அமைச்சராக நிதின் கட்கரியும், நிர்மலா சீதாராமனுக்கு வேறு ஏதாவது முக்கிய துறை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை வாரணாசியில் கங்கை கரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் முதன்மை ஆலோசகராக ஹஸ்முக் ஆதியா நியமிக்கப்பட வாய்ப்பு உண்டு என்கின்றனர் மேலும்,பாஜகவில் முக்கிய பொறுப்பில் குறைந்தது 25 புது முகங்களை அறிமுகம் செய்ய உள்ளதாம் பாஜக

click me!