
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் மதிமுக மாநாடு நடைபெற்றது. அதில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதாவது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஜனாதிபதியிடம் கையெழுத்து வாங்க வேண்டும். மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுவது. காவிரி மேலாண்மை அமைப்பது, உள்ளிட்ட 23 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மாலை 6 மணிக்கு மாநாட்டில் உரையாற்ற உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள் மாணவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.