தமிழிசையை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்... வரலாற்றை தோன்றி எடுத்த தரமான சம்பவம்!

By vinoth kumarFirst Published Sep 3, 2018, 6:24 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள பிறகும் பாரதிய ஜனதா கட்சியினர் அமைதி காப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள பிறகும் பாரதிய ஜனதா கட்சியினர் அமைதி காப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 60 ரூபாயாக உயர்ந்த போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பாரதிய ஜனதா கட்சியினர் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

ஆனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82.24 ரூபாயாக உயர்ந்துள்ள நிலையிலும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் அமைதி காக்கின்றனர். இதனை சமூக வலைதளங்களில் கடுமையாக நெட்டிசன்கள் பாரதிய ஜனதாவினரின் பழைய பேட்டிகளையும் மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளனர். 

* டீசல் விலை திடுக்கிட வைக்கிறது.

* பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது

* கேஸ் விலை கவலைப்பட வைக்கிறது.

* மண்ணெண்ணெய் விலையோ மரண அடி கொடுக்கிறது.

இப்படி மக்களின் மீது மரண அடி கொடுத்தால், சாதாரண மக்கள் எப்படி வாழ்வார்கள். இங்கே பிரணாப் முகர்ஜி சொல்கிறார், அங்கே எண்ணெய் நிறுவனங்களின் முதுகில் நஷ்டம் என்ற சுமையை ஏற்ற முடியாது. அப்படி என்றால் சாதாரண பாமர மக்களின் முதுகில் இந்த விலையேற்ற சுமையை ஏற்க முடியுமா, இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது. 

இந்த விலையேற்றத்தை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இனிமேலும் மக்களை ஏமாற்றினால் மத்தியில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்றார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, கருப்பு பணம் மீட்பதில் மத்திய அரசுக்கு எற்பட்டுள்ள தோல்வி போன்றவற்றை விமர்சித்து மீம்ஸ்கள் உலா வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பொருளாதார பிரச்சனை அதிகரித்து வருவது பாரதிய ஜனதாவுக்கு கட்சி பின்னடைவாக கருதப்படுகிறது.

click me!