
தமிழகத்தில் விரைவில் 2000 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்து ஒன்று மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி இன்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாள்கோவில்பட்டி அருகே சாலையில் பழுதாகி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
வேகமாக வந்த அரசு பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் விரைவில் 2000 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலைகளில் பழுதாகும் பேருந்துகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.
அரசு பேருந்துகள் அனைத்தும் நல்ல நிலையில் தான் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.