If the election was held in RK Nagar the DMK would have been successful
சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்று இருந்திருந்தால் திமுகவே வெற்றி பெற்றிருக்கும் என்று அக்கட்சியின் செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் பம்பரம் போல படு ஆக்டிவாக இருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். விவசாயிகள் பிரச்சனைக்காக பொதுவேலை நிறுத்தம், கட்சியைப் பலப்படுத்த மா.செ.க்கள் கூட்டம் என சுழன்று கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானதையே மையமாகக் கொண்டு பேசினார்."திமுக வெற்றி பெறும் சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியது. இதன் அடிப்படையிலேயே தேர்தல் ரத்தானது. டிடிவி தினகரன் 2 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருந்தாலும், திமுகவே வெற்றி பெற்றிருக்கும்.தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல. பொதுத்தேர்தல் தான் நடைபெறும்". இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.