
நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பளம் உயர்வு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரமாகவும் ரூபாயாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 90 ஆயிரம் ரூபாயில் இருந்து .2 லட்சத்து 50 ஆயிரமாகவும் சம்பள உயர்வு இருக்கும். இந்த சம்பள உயர்வு 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என அந்த அரசாணை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற மற்றும் 24 உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளத்தை 2 மடங்குக்கு மேல் அதிகரிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அந்த சட்ட மசோதாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாதச் சம்பளம் தற்போதைய ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.80 லட்சமாக உயர்த்துவது என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்துவது என்றும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்துவது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2016, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும். இதனால் ஓய்வுபெற்ற 2,500 நீதிபதிகளும் இதனால் பலன் பெறுவர்.
2017 ஜூலை 1 முதல் வீட்டு வாடகைப் படியும் செப்டம்பர் 22 முதல் செலவின படியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கான சம்பள உயர்வு குறித்து கடந்த 2016-ல் அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 31 ஆகும். தற்போது 25 நீதிபதிகளே உள்ளனர். 24 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1,079 ஆகும். ஆனால் தற்போது 682 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
இதைத் தொடங்ந்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பளம் உயர்வு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரமாகவும் ரூபாயாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 90 ஆயிரம் ரூபாயில் இருந்து .2 லட்சத்து 50 ஆயிரமாகவும் சம்பள உயர்வு இருக்கும். இந்த சம்பள உயர்வு 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என அந்த அரசாணை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.