இரண்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்.? இதோ அந்தப் பட்டியல்..!

By Asianet TamilFirst Published May 3, 2021, 8:53 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பல கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 
 

தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்றபோதிலும், திமுக மட்டும் தனித்து 126 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே இந்த முறையும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏராளமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் விவரம்:
1. தியாகராயநகர் - திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி, அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை 137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2. மொடக்குறிச்சி: பாஜக வேட்பாளர் சரஸ்வதி, திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
3. தென்காசி: காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
4. மேட்டூர்: பாமக வேட்பாளர் சதாசிவம் திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசபெருமாளை 656 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
5. காட்பாடி: திமுக வேட்பாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 
6. கிருஷ்ணகிரி: அதிமுக வேட்பாளர் அசோக்குமார், திமுக வேட்பாளர் செங்குட்டுவனை 794 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
7. விருதாச்சலம்: காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பாமக வேட்பாளர் கார்த்திகேயனைவிட 862 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
8. நெய்வேலி: திமுக வேட்பாளர் சபாராஜேந்திரன், பாமக வேட்பாளர் ஜெகனை 977 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
9. ஜோலார்பேட்டை: திமுக வேட்பாளர் தேவராஜ், அதிமுக வேட்பாளர் வீரமணியை விட 1091 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.
10. கிணத்துகடவு: அதிமுக வேட்பாளர் தாமோதர், திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை 1095 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 
11. அந்தியூர்: திமுக வேட்பாளார் வெங்கடாச்சலம் எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சண்முகவேலைவிட 1275 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
12. திருமயம்: திமுக வேட்பாளர் ரகுபதி,  அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை 1382 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 
13. தாராபுரம்: திமுக வேட்பாளர் கயல்விழி, பாஜக வேட்பாளர் எல்.முருகனை 1393 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 
14. உத்திரமேரூர்: திமுக வேட்பாளர் சுந்தர், அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்தை 1622 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
15. பொள்ளாச்சி: அதிமுக வேட்பாளர் பெள்ளாச்சி ஜெயராமன், திமுக வேட்பாளர் வரதராஜனை 1725 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 
16. கோவை தெற்கு: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மநீம வேட்பாளர் கமல்ஹாசனை 1728 வாக்குகள்  அதிகம் பெற்று வென்றார்.
17. கூடலூர்: அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன், திமுக வேட்பாளர் கலசலிங்கத்தை 1945 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
18. திருப்போரூர்: விசிக வேட்பாளர் பாலாஜி, பாமக வேட்பாளர் ஆறுமுகத்தை 1947 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 
19. ராசிபுரம்: திமுக வேட்பாளர் மதிவேந்தன், அதிமுக வேட்பாளர் சரோஜாவை 1952 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.
20. மைலம்: பாமக வேட்பாளர் சிவக்குமார், திமுக வேட்பாளர் மாசிலாமணியை விட 2230 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

click me!