நிறைவடைந்தது 2 ஜி ஊழல் வழக்கு இறுதி கட்ட விசாரணை…3 மாதங்களில் தீர்ப்பு… திஹார் செல்வாரா ஆ.ராசா?

First Published Apr 21, 2017, 7:22 AM IST
Highlights
2 G spectrum


நிறைவடைந்தது 2 ஜி ஊழல் வழக்கு இறுதி கட்ட விசாரணை…3 மாதங்களில் தீர்ப்பு… திஹார் செல்வாரா ஆ.ராசா?

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் இறுதி கட்ட வாதம் நிறைவடைந்து விட்டதால் இன்னும் 3 மாதங்களில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியின் போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தததில் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததது.

இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தொலைத்தொடர்புமந்திரியாக இருந்த ஆ.ராசா, தி.மு.க எம்.பி. கனிமொழி, தொலைத்தொடர்புத் துறை செயலாளர்கள், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில்இருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது.வழக்கு விசாரணையின் போது ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

அதன் பிறகு அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். சி.பி.ஐ. தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகிகுற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்தனர். பல ஆண்டுகளாக குறுக்கு விசாரணையும் வக்கீல்கள் வாதமும்நீடித்தது.

தொடர்ந்து இறுதி வாதங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்னும் 3 மாதத்தில் நீதிபதி ஓ. பி. சைனி தீர்ப்பு கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் 2 வழக்குகளும், அமலாக்கப்புரிவு சார்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.கனிமொழி, ஆ.ராசா தவிர ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ்  ஆகிய 3நிறுவனங்களும் வழக்கை சந்தித்தன.

நீண்டு கொண்டே வந்த இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது. ஆ.ராசா தப்புவாரா? அல்லது மீண்டும் திஹார் செல்வாரா?

 


 

 

tags
click me!