சின்னம்மா ன்னு சொன்னாலே அருவருப்பா இருக்கு….அமைச்சரின் அதிரடி பேச்சு…

First Published Apr 21, 2017, 6:30 AM IST
Highlights
k.c.veeramani speech


அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கவே அருவருப்பாக உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். இந்த குடும்பத்திற்காக, கட்சி மற்றும் ஆட்சியை இழக்க விரும்பவில்லை, எனவும் அவர் அதிரடியாக தெரிவித்தார்.

வேலுார் மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற . வணிக வரித்துறை அமைச்சர், கே.சி.வீரமணி பேசும்போது, சசிகலா குடும்பத்தை விரட்டியடித்து,எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அதிமுகவை மீட்க வேண்டும் என தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தால் அதிமுகவிற்கு அழிவு தான்' என, அந்த குடும்பத்திடம், பலமுறை தான் சொல்லியிருப்பதாக வீரமணி கூறினார்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தான் சசிகலா அணியில் இருந்தபோது ., கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் குற்றவாளியாக பார்த்தனர் என்று கூறிய வீரமணி,. எந்தவொரு சுபம், துக்க நிகழ்ச்சிக்கு யாருமே என்னை அழைக்காததால், மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்தார்.

சின்னம்மா என்ற வார்த்தையே, தற்போது தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே அருவருப்பாக மாறிவிட்டதாகவும் சசிகலாவுக்கு தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது அவருக்கு புத்துணர்வு அளிப்பதாக தெரிவித்தார்.


கூவத்துார் விடுதியில் தங்கி இருந்த போது, சசிகலா குடும்பத்திற்கு எதிராக குரல் கொடுத்த, 12 அமைச்சர்களில், முதல் அமைச்சர் தான் தான். என்றும் தற்போது ஒரு குடும்பத்திற்காக கட்சி, ஆட்சியை இழக்க விரும்பவில்லை என்றும் கே.சி.வீரமணி தெரிவித்தார்

click me!