#Breaking: கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.65 கோடி பறிமுதல்... லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Jan 20, 2022, 6:24 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 2.65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 2.65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இந்த நிலையில் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தினர். கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.  வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தெலுங்கானாவிலும் இந்த சோதனை நடைபெற்றது. கே.பி.அன்பழகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.பி. அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோட அள்ளியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டின் முன்பு அவருடைய ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இதனிடையே கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2.65 கோடி ரூபாய், 6.637 கிலோ கிராம் தங்கம், 13.85 கிலோ வெள்ளி மற்றும் வங்கி பெட்டக சாவி, வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி சொத்து குவித்ததாக அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு உள்ளாகும் 6வது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் ஆவார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் வீடுகளில், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.

click me!