முக்கிய அமைச்சரின் பெயரை சொல்லி 18 லட்சத்தை ஆட்டயப் போட்ட பலே கில்லாடி. போலீஸ் தீவிர விசாரணை.

Ezhilarasan Babu   | Asianet News
Published : Jul 06, 2021, 07:29 PM IST
முக்கிய அமைச்சரின் பெயரை சொல்லி 18 லட்சத்தை ஆட்டயப் போட்ட பலே கில்லாடி. போலீஸ் தீவிர விசாரணை.

சுருக்கம்

எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பாலத்திற்கு கீழே சென்று திரும்பி வரச் சொல்லி இறங்கியுள்ளார். காரில் சுரேஷ் மற்றும் சின்னையா திரும்பி வந்து பார்த்தபோது அங்கு முருகனை காணவில்லை

 தனக்கு ஒரு முக்கிய அமைச்சர் நன்கு தெரிந்தவர் என்றும், அவரிடம் சொல்லி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்த நபரை கண்டிபிடுத்து படத்தை மீட்டித்தரகோரி  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், தேவபண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமாரி- வயது (34) கள்ளக்குறிச்சி நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னையா வயது (47) கள்ளக்குறிச்சி ராதாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது (34) ஆகிய மூன்று பேரும் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்; அதில், மூவரும் கள்ளக்குறிச்சியில் வருமான வரி கணக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர், அதில் ரத்தினகுமாரி தற்காலிக கணக்கராக வேலை செய்து வருகிறார்.

அதே அலுவலகத்தில் சின்னையா மற்றும் சுரேஷ் தற்காலிக ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்கள். ரத்தின குமாரி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பேருந்தில் வேலைக்கு செல்லும்போது பழக்கமான முருகன் என்பவர்,  தான்  வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாகவும், மூங்கில் துறைப்பட்டில்  செயல்பட்டுவரும் சர்க்கரை ஆலையில் சட்ட ஆலோசகராக இருப்பதாகவும், தனக்கு தற்போது உள்ள அமைச்சர்கள் நன்கு தெரியும் என்றும், அதன் மூலம் மின்சார வாரியத்தில் அரசு வேலை பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரொக்க பணத்தை தயார் செய்தால் ஜூன் 1ஆம் தேதி  அமைச்சரை சந்திக்கலாம்  என்று கூறியுள்ளார். அதன் பேரில், 3 பேரும் தலா 6 லட்சம் வீதம் மொத்தமாக 18 லட்ச ரூபாய் தயார் செய்து முருகனிடம் தெரிவித்துள்ளனர்.

முருகன் வடபழனி கமலா திரையரங்கம் அருகே உள்ள தனியார் (ஆதித்யா) ஹோட்டலில் மூன்று அறைகளை (30.06.21) அன்று பதிவு செய்துவிட்டு, ரத்தினக்குமாரிக்கு தகவல் அளித்ததன் பேரில், சின்னையா, சுரேஷ்  மற்றும் உறவினர்கள் என 5 பேர் மொத்தமாக சுரேஷ்க்கு சொந்தமான காரில் கடந்த (30.06.21) அன்று மாலை சுமார் 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு ஹோட்டலில் அறையில் தங்கியுள்ளனர். முருகனும் அங்கேயே தனி அறை தங்கியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் 01.06.21 தேதி காலை அமைச்சரை சந்திக்க செல்ல வேண்டும் எனக் கூறிய முருகன், ஒரு கார் மட்டும் இருப்பதால் அனைவரும் செல்ல முடியாது. தன்னிடம் ஒரு நான்கு சக்கர வாகனம் இருப்பதாகவும், கோடம்பாக்கத்தில் சென்று அதனை எடுத்து வரலாம் என சுரேஷ் மற்றும் சின்னையா ஆகியோரை அழைத்துக் கொண்டு சுரேஷ்க்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தில்  புறப்பட்டுச் சென்ற முருகன் திடீரென, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு, எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பாலத்திற்கு கீழே சென்று திரும்பி வரச் சொல்லி இறங்கியுள்ளார். 

காரில் சுரேஷ் மற்றும் சின்னையா திரும்பி வந்து பார்த்தபோது அங்கு முருகனை காணவில்லை, அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, செல்போன் அனைத்து வைத்திருந்தது. உடனடியாக இருவரும் ஹோட்டல் அறைக்கு வந்து அவருக்காக காத்திருந்தாகவும், இரவு வெகுநேரமாகியும் முருகன் வரவில்லை, மேலும் அவரது செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் இல் இருந்தது. இதனால் பதற்றமடைந்த அவர்கள், பணம் வைத்திருந்த பையை எதார்த்தமாக சோதனை செய்து பார்த்தபோது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த 3வருக்கும் முருகன் மீது சந்தேகம் ஏற்பட்டு, ஒரே தளத்தில், பக்கதில் அறையில் தங்கியிருந்த முருகன், அடிக்கடி தங்களின் அறைக்கு வந்து சென்றதாகவும், மூவரும் அசந்த நேரத்தில் பணத்தை திருடிவிட்டு, அமைச்சரை சந்திக்க செல்வதாக கூறி நாடகமாடியதும் பின்னர் தெரியவந்தது.என தங்களின் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து வடபழனி காவல் நிலையத்தில் ரத்தின குமாரி, சின்னையா, சுரேஷ் ஆகிய 3 பேரும் அளித்த புகாரின் பேரில் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சி, கோடம்பாக்கம் பகுதியில் இருதியாக தப்பி சென்றபோது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் முருகன் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து வடபழனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!