18 எம்.எல்.ஏக்கள் பெயர்களை அரசு இணையதளத்தில் இருந்து தூக்கிய எடப்பாடி...! டிடிவிக்கு புது ஷாக்...!

First Published Sep 23, 2017, 8:12 PM IST
Highlights
18 constituencies including Perambur were declared vacant.


எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் 18 பேரின் பெயர்கள் அரசு இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பெரம்பூர் உள்ளிட்ட 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சபாநாயகர் தனபால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார். 

இதுகுறித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் ஆனால் அடுத்த தீர்ப்பு வரும் வரை அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

இதற்கு டிடிவி தரப்பினர் நீதியும் நியாமும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று மார்தட்டி கொண்டிருந்தனர். 

இந்நிலையில்,  எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் 18 பேரின் பெயர்கள் அரசு இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பெரம்பூர் உள்ளிட்ட 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது டிடிவிக்கு எடப்பாடியின் இந்த அதிரடி நடவடிக்கை புது வகையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்றே சொல்லலாம். 

click me!