
ஜெயலலிதா கனவுகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாகவும் அதிமுக கோட்டையில் மோதுபவர்கள் தலை உடையும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி கிருஷ்ணகிரியில் இன்று எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி இலவசமாக வண்டல் மண் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, அரசம்பட்டி உள்ளிட்ட இரு இடங்களில் தடுப்பணை கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும், பர்கூர் தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பன உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஜெயலலிதா கனவுகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாகவும்,அதிமுக கோட்டையில் மோதுபவர்கள் தலை உடையும் எனவும் எடப்பாடி எச்சரிக்கை விடுத்தார்.