உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட 15 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. விமான நிலையத்தில் 38 வயது பெண் கைது..!!

Published : Dec 08, 2020, 11:20 AM IST
உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட 15 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. விமான நிலையத்தில் 38 வயது பெண் கைது..!!

சுருக்கம்

துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட  ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டதுடன் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பன்னாட்டு  விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் ராஜன்சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது ஒருவித பதட்டத்துடன் வெளியேற சென்ற நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த ஜோதி சின்னராஜ்(38) என்ற பெண்னை சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவுமில்லை. தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்து பார்த்தபோது மேல் உள்ளாடை சற்று வித்தயாசமாக  இருந்தது. 

அவற்றை கழுற்றி பார்த்த போது தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 15 லட்சம் மதிப்புள்ள் 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜோதி சின்னராஜை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!