நாட்டில் ஊரடங்கால் 120 மில்லியன் மக்கள் வேலை இழப்பு.. ஆனால் 100 பில்லினியர்களின் செல்வம் 38 சதவீதம் அதிகரிப்பு

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2021, 4:28 PM IST
Highlights

இந்தத் தொகை நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு  அதிகமாகும். இந்த தொகை சுமார் 14 கோடி ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் தலா 94,045  ரூபாய் கிடைக்கும். தொற்றுநோய் காலத்திற்கு முன்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி 2.7 லட்சம் கோடி சொத்து இருந்த நிலையில் அது அக்டோபர் தொடக்கத்தில் 5.7 லட்சம் கோடியாக மாறியுள்ளது.

நாடு முழுவதும் செய்யப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் 120 மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ள நிலையில், சுமார் 100 பெரிய பில்லினியர்களின் செல்வம் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. என ஆக்ஸ்பாம் என்ற பொருளாதார கணக்கிட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் அவர்களின் கூடுதல் வருமானம் 13 லட்சத்தை தாண்டியுள்ளது  என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்று  தீவிரமாக இருந்த காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து இன்றும் தவித்து வருகின்றனர். 

இது குறித்து ஆய்வு செய்த பொருளாதார அளவீட்டு நிறுவனமான ஆக்ஸ்பாம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனவைரஸ் ஊரடங்கும் சமூகத்தில் பொருளாதார சமத்துவமின்மை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இச்சமத்துவமின்மை காணப்படுகிறது. உலக அளவில் சுமார் 1000 பில்லியனர்களின் சொத்து மதிப்பு கடந்த 9 மாதங்களில் பன்மடங்கு மேம்பட்டுள்ளது. ஆனால் ஏழைகளோ கொரோனாவுக்கு முந்தைய நிலைமைக்கு திரும்பவே பல ஆண்டுகள் ஆகலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானி மட்டுமல்ல குமார் மங்கலம் பில்லா, கௌதம் அதானி, அஸீம் பிரேம்ஜி, சுனில் மிட்டல், ஷிவ் நாடார் மற்றும் லட்சுமி மிட்டல் போன்ற தொழிலதிபர்களின் வருமானமும் இந்த காலத்தில் வேகமாக வளர்ந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய 100 பில்லியனர்களின் செல்வம் 2020 மார்ச் மாதத்தில் இருந்து சுமார் 13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்தத் தொகை நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு  அதிகமாகும். இந்த தொகை சுமார் 14 கோடி ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் தலா 94,045  ரூபாய் கிடைக்கும். தொற்றுநோய் காலத்திற்கு முன்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி 2.7 லட்சம் கோடி சொத்து இருந்த நிலையில் அது அக்டோபர் தொடக்கத்தில் 5.7 லட்சம் கோடியாக மாறியுள்ளது. வெறும் ஆறு மாதங்களில் அவரது சொத்து 3 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதாவது அவரது சொத்து ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் கோடியும், ஒவ்வொரு நாளும் 1,667 கோடியும், ஒவ்வொரு மணி நேரமும் 69  கோடியும் அதிகரித்துள்ளது. பணக்காரர்கள் அதிக செல்வந்தர்களாக மாறியுள்ளனர். மறுபுறம் ஏப்ரல் மாதத்தில் 1.7 லட்சம் பேர் ஒவ்வொரு மணிநேரமும் வேலையை இழந்துள்ளனர். கொரோனா தொற்றுநோயால் 12.2 மில்லியன் ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

இதில் 75 சதவீதம் மக்கள் அதாவது  9.2 கோடி மக்கள் அமைப்புசாரா துறையைச் சார்ந்தவர்கள். மேலும் அமைப்புசாரா துறையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டினி, தற்கொலை சாலை மற்றும் ரயில் விபத்துக்கள், காவல்துறை அராஜகம் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காதது, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் என ஏப்ரல் 22 ஆம் தேதி வரை, தேசிய மனித உரிமை ஆணையம் 2,582 மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
 

click me!