12 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து. ஸ்டாலின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய எடப்பாடியார். மக்கள் செல்வாக்கு பெருகுது

By Ezhilarasan BabuFirst Published Feb 5, 2021, 6:59 PM IST
Highlights

கூட்டுறவு வங்களிகளில் விவசாயிகள் பெற்ற பயிற்கடன்களை தள்ளுபடி செய்வதாக அறித்த தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு நன்றி தெரிவித்துள்ளார். 

கூட்டுறவு வங்களிகளில் விவசாயிகள் பெற்ற பயிற்கடன்களை தள்ளுபடி செய்வதாக அறித்த தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு நன்றி தெரிவித்துள்ளார். 

நிலுவையில் உள்ள, கூட்டுறவு வங்கி விவசாய பயிர் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் வேளாண் துறைக்கான புதிய அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டார். அதில், வேளாண் துறை தொடர்பாக பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்த முதலமைச்சர், விவசாயிகளுக்கு துயர் ஏற்படும் போது அம்மா அரசு உதவி வருகிறது என்று கூறினார். 

“அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்” நானும் ஒரு விவசாயி;  விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்; வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், பயிர்க்கடன் நிலுவை வைத்துள்ள 16.13 இலட்சம் வேளாண் பெருமக்களும் எந்தவிதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். 

இந்நிலையில், விவசாய கடனை ரத்து செய்ய தமிழக முதல்வரை பாராட்டி தேசிய தென்னிந்திய விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கூறிய அவர், 2 புயல்கள், தாமதமாக பெய்த பருவ மழை, கொரோனா காலம் என பல்வேறு இடற்பாடுகளில் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். மிகுந்த நஷ்டம் ஏற்படும் நிலையில் வாடியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றியினை விவசாயிகள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

மேலும், விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பொழுது நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகம் அழைத்து வந்தவர் தமிழக முதலமைச்சர் என்றார். மேலும், சிறுகுறு விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிவித்தது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனையும் முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய தென்னிந்திய விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு வேண்டுகோள் வைத்தார். அரசே கடுமையான பொருளாதார நிலையில் சந்தித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கான கடனை ரத்து செய்து அறிவித்திருப்பது , விவசாயிகள் மத்தியில் எடப்பாடிருக்கு ஆதரவையும், செல்வாக்கையும் பன் மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றால் விவசாயிக்களுக்கு அதை செய்வேன் இதைசெய்வேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில்,  ஒரேயடியாக முதலமைச்சர் எடப்பாடியார் 12 ஆயிரம் கோடி விவசாய கடனை ரத்து செய்து தானே விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய தலைவர் என்பதை அவர் மீண்டும் உறுதிசெய்துள்ளார். இது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!