எடப்பாடிக்கு டீ, காபி கொடுத்து கூடவே அல்வா கொடுத்து அனுப்பினார் ஆளுநர்.. துரைமுருகன் நக்கல் பேச்சு..

By Ezhilarasan BabuFirst Published Feb 5, 2021, 5:03 PM IST
Highlights

ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே இந்தியா என ஆசோகர் கால, அரசர் கால காட்சியை மோடி உருவாக்க பார்க்கிறார் எனவும்,  7 பேர் விவகாரத்தில் அமைச்சரவை முடிவை ஆளுனர் நிறைவேற்றி இருக்க வேண்டும். எனவும் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். 
 

ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே இந்தியா என ஆசோகர் கால, அரசர் கால காட்சியை மோடி உருவாக்க பார்க்கிறார் எனவும்,  7 பேர் விவகாரத்தில் அமைச்சரவை முடிவை ஆளுனர் நிறைவேற்றி இருக்க வேண்டும். எனவும் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். 

எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்காக வேலூர் மாவட்ட தி.மு.க சட்டத்துறை சார்பில் மத்திய மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் "WAR ROOM"-ஐ தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திறந்துவைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  துரைமுருகன் கூறியதாவது: மத்திய சர்க்கார் வழக்கறிஞரும், உச்ச நீதிமன்றம் ஆளுனரே 7 பேரை விடுவிக்க அதிகாரம் உண்டு என கூறிய பிறகும் அந்த அதிகாரம் எனக்கு இல்லை என தமிழக ஆளுனர் கூறுவது ஏற்ப்புடையது அல்ல. மாநில அரசு அமைச்சரவை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அதை ஆளுனர் 100% அல்லது 99% சதவிகிதம் நிறைவேற்றுவது தான் வழக்கம். ஆனால் இந்த ஆளுனர் வித்தியாமானவராக உள்ளார். அதிமுக அமைச்சர்களை மதிப்பது போலும், மதிக்காததுபோலும் உள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் ஆளுனரை சந்தித்த போது 7 பேர் விடுதலை குறித்து பார்க்கலாம் என கூறியிருக்கிறார். ஆளுனர் தற்போதைய முடிவை முதல்வரிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால் முதல்வர் சந்திப்பில் டீ, காபி குடித்துவிட்டு அல்வா கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் பலமாக ஆளுனரை கண்டிக்க வேண்டும். முதல்வரிடத்திலேயே மறைந்து பேசுவது ஆளுனருக்கு சரியல்ல. உச்சநீதிமன்றம் கூறிய இதற்கு பிறகும் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் சூத்திரதாரி யார் என மக்கள் அறிய வேண்டும். மத்திய அரசு நாடகம் ஆடுகிறது. ஆனால் திமுக நாடகம் ஆடுவதாக இப்போது கூறுபவர் ஏன் இத்தனை நாட்களாக கூறவில்லை. இப்போதாவது ஜனாதிபதி வாயை திறந்து எனக்கு தான் அதிகாரம் அல்லது, ஆளுனருக்கு தான் அதிகாரம் என பதில் கூற வேண்டும். பல நேரங்களில் மௌனம் காத்து பிரச்சனைகளுக்கு மோசடி வேலை செய்கிறார்கள். இதில் பெருமதிப்பிற்குறிய உச்சநீதிமன்றம் என்ன நினைக்கிறது என்பதை தெரிவிக்கவேண்டும். 

ஏற்கனவே முதல்வர் அவர்களது கட்சி விவகாரத்தில் கலங்கிபோயுள்ளார் என்றார். மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  இன்னும் கொஞ்ச நாளில் ஜனநாயகம் இருக்காது, கட்சிகள், சட்டமன்றம், பாராளுமன்றம் இருக்காது. ஆக ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே இந்தியா என்ற ஆசோகர் கால, அரசர் கால காட்சியை உருவாக்க பார்க்கிறார்கள். பட்ஜெட்டில் நிதியை ஒதுக்குகிறார்களே தவிர கொடுத்ததாக தெரியவில்லை. இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது குறித்து கேட்டதற்கு. ஏன் கருத்து சொல்லக்கூடாது. இன்றைக்கு உவகம் சுருங்கிபோயுள்ளது.  உலக நட்டில் எந்த பிரச்சனை நடந்தலும் கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில் விவசாயாகள் பிரச்சனையில் ஏன் வெளாநாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது என கேள்வி எழுப்பினார். 
 

click me!