மதிமுகவில் இருந்து விலகும் 12 முக்கிய நிர்வாகிகள்..? கதறும் வைகோ... கலங்கடித்த மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Dec 3, 2021, 2:47 PM IST
Highlights

வெளிப்படையாக பூசல் இல்லை என்று காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் கணன்று கொண்டிருக்கிறார்கள் நிர்வாகிகள்.  

வைகோ மகன் துரை வையாபுரி மதிமுக தலைமை நிலைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அந்தக் கட்சியில் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது. வெளிப்படையாக பூசல் இல்லை என்று காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் கணன்று கொண்டிருக்கிறார்கள் நிர்வாகிகள்.

 

துரை வைகோ மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் மதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியடைந்தனர். வைகோ மகனுக்கு மகுடம் சூட்டும் விழாவில், மாவட்டச் செயலாளர் திருவள்ளூர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், திண்டுக்கல் செல்வராகவன், புதுக்கோட்டை சந்திரசேகர், சிவகங்கை புலவர் செவந்தியப்பன், திருப்பூர் ஆர்.பி. மாரியப்பன் நாமக்கல் டி.என்.குருசாமி, விருதுநகர் ஆர்.எம்.சோமசுந்தரம், காஞ்சி வளையாபதி, நாகை ஏ.எஸ்.மோகன் ஆகியோர் கூட்டத்துக்கு வரவில்லை என்றும் கூறுகிறார்கள்.

மல்லை சத்யா தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதுவரை மல்லை சத்யா, துரை வைகோவின் வருகையை ஆதரித்துப் பேசவில்லை. சமூக வலைதளத்தில் எழுதவில்லை. செய்தியாளர்கள் கேட்டும் பேட்டிக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு, துரை வைகோவுக்குப் பொறுப்பு அளிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி வெளிநடப்பு செய்துவிட்டார். துரை வைகோவை கட்சிக்குள் திணிப்பதில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு உடன்பாடு இல்லை. ஆகவே அவர் அன்று நடந்த கூட்டத்தைப் புறக்கணிப்பு செய்துவிட்டார். ம.தி.மு.க., உயர்நிலை குழு உறுப்பினரும், நாமக்கல் மாவட்டச் செயலருமான டி.என்.குருசாமி, 20ம் தேதி கூட்டத்திற்கு வரவில்லை. இதனால், அவரிடமிருந்த மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அவரிடம் உயர்நிலை குழு உறுப்பினர் பதவி மட்டும் உள்ளது. இது குறித்து, வைகோ வெளியிட்ட அறிக்கையில், 'நாமக்கல் மாவட்டம், கட்சி நிர்வாக வசதிக்காக, நாமக்கல் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.'கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேகர், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கே.கே.கணேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் மதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் திமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து மதிமுக திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி-யாக இருக்கிறார். வைகோ திமுக எம்.எல்.ஏ.க்களால் ராஜ்ய சபா எம்.பி.-யாக தேர்வு செய்யப்பட்டு எம்.பியாக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. வைகோ தொடர்ந்து, திமுக ஆதரவாளராக தொடர்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான், துரை வைகோ மதிமுக தலைமை நிலையச் செயலாளராக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சில மதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மீண்டும் தாய்க் கழகம் திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்புபவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

இதுகுறித்து மதிமுகவினர் கூறுகையில், ‘’மதிமுகவில் இருந்து தாய்க் கட்சியான திமுகவுக்கு திரும்புவதற்காக சுமார் 12 மதிமுக நிர்வாகிகள் திமுக மேலிடத்தை அணுகியுள்ளனர். சமீபத்தில், துரை வையாபுரி மதிமுக தலைமைச் செயலாளராக பதவியேற்றதை அடுத்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் திமுக மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வதற்கு திமுக தலைமை தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர் என்பது உண்மைதான். அவர்கள் 28 ஆண்டுகளாக வைகோவுக்காகவும் அவருடைய கொள்கை உறுதிக்காகவும் ஆதரவாக நின்றார்கள். பொடா சட்டத்தில் வைகோவுடன் 19 மாதங்கள் சிறையில் இருந்தார்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையாக எதிர்த்த வாரிசு அரசியலை இப்போது தலைமையே வாரிசு அரசியல் செய்வதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்புபவர்களை கட்சியில் சேர்ப்பதில் ஆளும் திமுக ஒரு வித்தியாசமான பிரச்சனையை சந்தித்து வருகிறது. திமுகவில் சேர, மதிமுக மாவட்ட செயலர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

“மதிமுக தலைமை அவர்களை சரி செய்ய முயற்சித்ததாகவும் ஆனால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் பிடிகொடுக்க மறுத்துள்ளனர். கருத்து வேறுபாடுகளைக் களைவதற்குப் பதிலாக கட்சியை விட்டு வெளியேறும் அளவுக்கு சில மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்களா என்பது அவர்களிடம் பேசும்போதுதான் தெரியும்” என்று மற்றொரு மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இது குறித்து திமுகவினர் கூறுகையில், “முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவர் திமுகவில் சேர முயன்றபோது நாங்கள் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டோம். ஒரு காங்கிரஸ் தலைவருக்கு கட்சியில் இடம் அளிப்பதற்காக காங்கிரஸுடன் உறவை மோசமாக்கிக் கொள்ள திமுக தலைமை விரும்பவில்லை. அந்த காங்கிரஸ் நிர்வாகியும் எங்களுடைய எதிர்க்கட்சியில் போய் இணைந்தார். இப்போது மதிமுகவிலும் அதே பிரச்னை வந்துள்ளது. எங்கள் தலைவர்  எங்கள் கூட்டணி கட்சிகளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.

ஆனால், மதிமுக தரப்பில், ​​“மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் துரை வைகோவுக்கு மதிமுக தலைமை நிலையச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. துரை வைகோ அனைவரின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுக அதே உறுதியுடன் ஒற்றுமையுடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

click me!