ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு..!

Published : Feb 14, 2020, 11:55 AM IST
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு..!

சுருக்கம்

கடந்த 2017ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என கூறி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 

கடந்த 2017ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த  விவகாரத்தில் கடந்த 3 ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சபாநாயகர் காலதாமதம் செய்து வருவது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஓபிஎஸ் உட்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என கூறி 11 எம்எல்ஏக்கள் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழக சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!