11 புதிய மருத்துவ கல்லூரிகள்..! தூள் கிளப்பும் அதிமுக..!

By Manikandan S R SFirst Published Feb 14, 2020, 11:49 AM IST
Highlights

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்து அதிமுக அரசு பட்ஜெட்டில் கூறியுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில் கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித் உரையுடன் தொடங்கியது.  பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் 9ம் தேதி கூட்டம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் 2020-2021 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் முத்திரை தாள் வரி 1% இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டு குறைந்தபட்சமாக ரூ.5000 மிகாமல் வசூலிக்கப்பட இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடியும் இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படுவதாகவும் அதற்காக நிலம் கையகப்படுத்த, பணி மேற்கொள்ள ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. 


 
பக்கிங்காம் கால்வாய்,  கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ.5439,79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்து அதிமுக அரசு பட்ஜெட்டில் கூறியுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில் கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழில் முனைய மேம்பாட்டு திட்ட ம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிரடி திட்டங்களுடன் அதிமுக பட்ஜெட்..! கதிகலங்கும் திமுக..!

click me!