#BREAKING நாடு முழுவதும் CBSE 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய அரசு..!

By vinoth kumarFirst Published Apr 14, 2021, 2:31 PM IST
Highlights

நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கொரோனாவின் 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதோடு தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாகி வருகிறது. 

இதனிடையே, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டு என ராமதாஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி  வந்தனர். இதனையடுத்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்வுக்கு 15 நாளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!