அடி தூள்.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரெடி.. மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட பிடிஆர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2022, 12:45 PM IST
Highlights

தமிழகத்தில்  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  ஊக்கத் தொகை விரைவில் வழங்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்  தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில்  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  ஊக்கத் தொகை விரைவில் வழங்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்  தியாகராஜன் கூறியுள்ளார். அவரின் இந்த தகவல் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது, ஆனால் எப்படியான திமுகவின் வெற்றியை தடுத்து விட வேண்டுமென அதிமுக- பாஜக  பகீரத முயற்சியில் ஈடுபட்டு வந்தன, பல தடைகளை மீறி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக வெற்றி பெற்றது. இந்த இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு பெரிய பங்குண்டு என்பதை எவறும் மறுக்க முடியாது. மக்களை கவரும் வகையில் திமுக வழங்கிய தேர்தல் வாக்குறுதியே பெருமளவில் திமுகவின் வெற்றியை உறுதி செய்ததாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவே இருந்து வருகிறது. திமுகவினரே அதை ஒப்புக் கொள்ளவும் செய்கின்றனர்.

அதில் முக்கியமான வாக்குறுதி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதுதான். அதேபோல் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் போன்ற சமூக நல முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்ற  விமர்சனம் திமுக அரசு மீது இருந்து வருகிறது. இதை  வைத்து எதிர்க்கட்சியான அதிமுக பாஜக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குடும்பத் தலைவனுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் என்ன ஆயிற்று என அரசை பாஜக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றனர். வாக்குறுதி மட்டும் கொடுத்துவிட்டு திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்று விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதித்துறை அமைச்சர், அறிவித்தது போல விரைவில் தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறியுள்ள அவர், தமிழக முதலமைச்சர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது, அந்த அடிப்படையில் எப்போது அவர்கள் இதை கொடுக்க நினைக்கிறார்களோ அதற்கு நிதித்துறை அமைச்சர் என்ற  சார்பில் நான் தயாராகவே இருக்கிறேன், தற்போது இந்த திட்டத்தை  அமல்படுத்தும் வகையில் அதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, அதைத் தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார். அவரது இந்த தகவல் மகளிர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

click me!