10 ஆண்டு உறவு.. பல ஆண்களுடன் உல்லாசம்.. கிணற்றடிக்கு வரவழைத்து கள்ளக் காதலன் செய்த பயங்கரம்.

Published : Apr 04, 2022, 01:21 PM IST
10 ஆண்டு உறவு.. பல ஆண்களுடன் உல்லாசம்.. கிணற்றடிக்கு வரவழைத்து கள்ளக் காதலன் செய்த பயங்கரம்.

சுருக்கம்

கள்ளக் காதலிக்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நடந்துள்ளது .   

கள்ளக் காதலிக்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நடந்துள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது,  பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறிப்பது,  திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு பெண்களை கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பெண்கள் திருமணத்திற்கு  புறம்பான உறவில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் உயிரையே இழக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்ட ஒரு கொடூர சம்பவம் ஒன்று ஆற்காடு அடுத்துள்ள குக்குந்தியில் நடந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்ன குக்குந்தி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெய்சங்கர் (40).

இவரது மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கூலி வேலை செய்து வருகிறார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவிதாவுக்கு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மகேஸ்வரி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறினார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை, அதே நேரத்தில் அவர் தாய் வீட்டுக்கு செல்லவில்லை. இதனை அறிந்த கணவர் ஜெய்சங்கர் தனது மனைவி மாயமானது குறித்து ஆற்காடு காவல் நிலைய புகார் கொடுத்தார். முதலில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் குக்குந்தியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் வந்தது.

உடனே போலீசார் அங்கு சென்று பார்த்ததில் அது ஒரு பெண்ணின் சடலம் என தெரிந்தது. ஒரு வேலை அது மாயமான கவிதாவாக இருக்கலாமோ என சந்தேகித்த போலீசார் அவரது உறவினர்களை அழைத்து வந்து காட்டினர். கிணற்றில் மிதப்பது கவிதா தான் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கவிதாவின் உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கவிதாவுடன் தொடர்பில் இருந்தவர்களே அவரை அடித்து கொன்று கிணற்றில் வீசிய இருக்கக்கூடும் என குற்றம்சாட்டியதுடன், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்ந போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் சின்ன குக்குந்தியை சேர்ந்த, கவிதாவிடம் தொடர்பில் இருந்த கூலி தொழிலாளி பிரபு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான்தான் கவிதை கொன்றதாக ஒப்புக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக கவிதாவுடன் தொடர்ந்து இருப்பதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதாகவும், இந்நிலையில் வழக்கமாக இருவரும் சந்திக்கும் கிணற்றுக்கு அருகே கவிதாவை சந்தித்ததாகவும், அப்போது தான் காதலி கவிதா மற்ற ஆண்களுடன் தொடர்பு இருப்பதை கேட்டு கண்டித்த தாகவும், இதனால் தனக்கும்  கவிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரத்தில்  கவிதாவின் தலையை கல்லால் தாக்கி பின்னர் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகவும் பிரபு கூறியதாக தெரிகிறது. தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காதலன் பிரபுவை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!