20ல் 10 உறுதி... மீண்டும் அதிமுக ஆட்சியே... இன்றைக்கே முடிவு... அடித்துக் கூறும் அண்ணாமலை..!

Published : Apr 29, 2021, 10:31 AM IST
20ல் 10 உறுதி... மீண்டும் அதிமுக ஆட்சியே... இன்றைக்கே முடிவு... அடித்துக் கூறும் அண்ணாமலை..!

சுருக்கம்

2016ல் வெளியான கருத்துக் கணிப்புகளில் பெண்களின் எண்ணங்களை மன ஓட்டத்தை சரிவர கணிக்கத் தவறிவிட்டனர். தற்போது பெண்கள் அதிகளவு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வது உறுதி என தமிழக பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை அடித்துக் கூறியுள்ளார். இந்த தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் காண்கிறது. ஆனால் கருத்து கணிப்புகள் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றிபெறாது எனக் கூறுகின்றன.

இந்நிலையில், கரூர், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்தை அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளரும் அக்கட்சி துணை தலைவருமான அண்ணாமலை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இன்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. இதில் யார் வெற்றி பெறுவார் என்பது ஓரளவுக்கு தெரிய வரும்.

2016ல் வெளியான கருத்துக் கணிப்புகளில் பெண்களின் எண்ணங்களை மன ஓட்டத்தை சரிவர கணிக்கத் தவறிவிட்டனர். தற்போது பெண்கள் அதிகளவு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். பா.ஜ.க போட்டியிட்ட 20 இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று உறுதியாக சட்டசபைக்குள் நுழையும்’’என அவர் அடித்துக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யிடம் நாளையும் விசாரணை.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. பரபரப்பு தகவல்!
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!