டவ்-தே புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்.. தமிழக அரசுக்கு சீமான் வைத்த அதிரடி கோரிக்கை.

Published : May 17, 2021, 09:22 AM IST
டவ்-தே புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்.. தமிழக அரசுக்கு சீமான் வைத்த அதிரடி கோரிக்கை.

சுருக்கம்

காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி

கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், 17 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது பெரும் கலக்கத்தையும், சோகத்தையும் அவரது குடும்பத்தினரிடையேயும், மீனவர்களிடையேயும் ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியன்று கடலுக்குச் சென்ற அவர்களது படகு, டவ்-தே புயல் எச்சரிக்கையை அடுத்துக் கரைதிரும்பும்போது சிக்கி மூழ்கியதால் நாகை மீனவர்கள் 10 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அக்குடும்பத்தினரின் துயர்போக்க மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அரசின் தலையாயக்கடமையாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, மத்திய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் காணாமல்போன நாகை மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் துரிதப்படுத்தி மீனவர்களை விரைந்து மீட்கவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!