Coronavirus: அடகடவுளே.. 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சியில் முதல்வர்..!

Published : Jan 01, 2022, 12:26 PM IST
Coronavirus: அடகடவுளே.. 10 அமைச்சர்கள்,  20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சியில் முதல்வர்..!

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகித்தது. 

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகித்தது. இந்நிலையில், கொரோனாவை தொடர்ந்து ஒமிக்ரான் பரவல் மகாராஷ்டிராவில் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,067ஆக பதிவாகியுள்ளது. மும்பை மற்றும் புனேவில் கொரோனா பரவல் பாதிப்பு 2 மடங்காக அதிகரித்து வருகின்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!