தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டிருந்தார்.
அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதுதொடர்பாக பல்வேறு முறை கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து வேறு வழியில்லாமல் ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையாக கருத்துகளை தெரிவித்து இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்ற 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினர். அதில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன அந்த வகையில், 1. சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, 2. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா 3.தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, 4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 5. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 6.தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 7.தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 8. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 9. அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 10. தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவற்றை ஆளுநர் ரவி திரும்பி அனுப்பினார்.
இதையும் படிங்க;- CM Stalin:ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டியது தான்! ஆனாலும்!சட்டமன்றத்தில் இறங்கி அடித்த முதல்வர் ஸ்டாலின்!
இந்நிலையில், இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு அவை தொடங்கியதும், அண்மையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களான வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார், சுதந்திரப் போராட்ட வீரர் எசங்கரய்யா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் அனைத்து கட்சி தலைவர்கள் விவாதத்திற்கு பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட முன்வடிவுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.