சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பரபரப்பு.. கடத்திவரப்பட்ட 1.18 கோடி மதிப்பலான தங்க கட்டிகள் பறிமுதல்.

By Ezhilarasan BabuFirst Published May 18, 2021, 9:56 AM IST
Highlights

சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் எமா்ஜென்சி விளக்கிற்குள் மறைத்து வைத்து கடத்திவந்த ரூ.1.18 கோடி மதிப்புடைய 2.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் எமா்ஜென்சி விளக்கிற்குள் மறைத்து வைத்து கடத்திவந்த ரூ.1.18 கோடி மதிப்புடைய 2.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாா்ஜாவிலிருந்து நேற்று அதிகாலை சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த சிறப்பு விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அவா்கள் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிளுக்கு அவசரமாக தகவல் கொடுத்தனா்.உடனடியாக விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.ஏா் அரேபியா விமானத்தில் வந்த 92 பயணிகளையும், அவா்கள் உடமைகளையும் தீவிரமாக  சோதனையிட்டனா். அப்போது கா்நாடகா மாநிலம் மங்களூரை சோ்ந்த பயணி முகமது அராபத்(24) என்பவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய சூட்கேஸ், பைகளை தீவிரமாக சோதனை செய்தபோது, சூட்கேசுக்குள் வைத்திருந்த எமா்ஜென்சி விளக்கு மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதை கழற்றி பாா்த்தபோது பின்பகுதியில் 18 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். அது மொத்தம் 2.39 கிலோ எடைகொண்டதும் அதன் மதிப்பு 1.18 கோடி எனவுக் கணக்கிடப்பட்டது. அத்தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன். பயணி முகமது அராபத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவா் சா்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சோ்ந்தவா் என்று தெரியவந்துள்ளது. 

 

click me!