
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உச்சநீதிமன்ற தடையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிக்கையால் மாற்ற முடியாது. இதை எதிர்கொள்வதற்கு, மிருகவதை தடை சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவசர சட்டம் கொண்டு வந்து அதை நிறைவேற்றி இருக்கலாம்.
உச்சநீதிமன்றம், தடை விதித்து, 32 மாதங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பாஜக உரிய நடவடிக்கை எடுக்க்கவில்லை. ஆனால, காங்கிரஸ் மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவசர சட்டம் கொண்டு வருவதால் எந்த பயனும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு இதுவரை 22 அவசர சட்டங்கள் கொண்டு வந்துள்ளன. எனவே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசர சட்டம் கொண்டு வர முடியாது என கூறுவதை, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.