அப்பாட... முடிந்தது தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு... ஓ.பி.எஸ், எடப்பாடி நிம்மதி பெருமூச்சு..!

Published : Sep 20, 2021, 12:43 PM IST
அப்பாட... முடிந்தது தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு... ஓ.பி.எஸ், எடப்பாடி நிம்மதி பெருமூச்சு..!

சுருக்கம்

 புதிய பதவிகளை உருவாக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால், இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018மே 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் 

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், 2017 செப்டம்பர் 12ல் நடத்திய பொதுக் குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதியதாக இரண்டு பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால், இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018மே 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிட, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனவும், இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதா? இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தது. தேர்தல் ஆணையம், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் வழக்கு தான் தொடர முடியும் எனவும் குறிப்பிட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சிறை சென்றபின்னர், புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!