YOUTUBE வீடியோவுல இதையுமா கற்றுத்தறாங்க ..? சரியா போச்சு போ ..!

Published : Mar 04, 2019, 02:16 PM IST
YOUTUBE வீடியோவுல இதையுமா கற்றுத்தறாங்க ..? சரியா போச்சு போ ..!

சுருக்கம்

கடன் தோலை காரணமாக, யூ டியூப் வீடியோவை பார்த்து கள்ள நோட்டு அடித்துள்ளார் பட்டதாரி பெண் ஒருவர். இந்த பெண்ணின் இப்படி ஒரு  நடவடிக்கைக்கு காரணமான அதிர்ச்சி தரும் தகவல் இதோ...

கடன் தோலை காரணமாக, யூ டியூப் வீடியோவை பார்த்து கள்ள நோட்டு அடித்துள்ளார் பட்டதாரி பெண் ஒருவர். இந்த பெண்ணின் இப்படி ஒரு நடவடிக்கைக்கு காரணமான அதிர்ச்சி தரும் தகவல் இதோ...

கடலூர் மாவட்டம் உள்ள சிதம்பரம் மாரியப்பா நகரைசேர்ந்தவர் பரணிகுமாரி - ஆனந்தன் தம்பதியினர். நன்றாக சில ஆண்டு காலம் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கையில், இடி விழுந்தது போல கருத்து வேறுபாடு காரணமாக  திடீரென தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை நடு ரோட்டில் தவிக்க விட்டு சென்றுள்ளார் கணவர் ஆனந்தன்.

செய்வதறியாது தவித்த, பரணிகுமாரி தொடக்கத்தில் வருமானத்திற்க்காக எம்ப்ராயடரி தொழில் செய்து வந்துள்ளார்.பின்னர் அந்த தொழிலில் போதுமான வருமானம் கிடைவில்லை என்பதால், என்ன செய்வது என்று யோசனை செய்த பரணிகுமாரிக்கு, கள்ளநோட்டு தயார் செய்யும் யோசனை வந்துள்ளது.

இதற்காக ,யூடியூபில் கள்ளநோட்டு தயாரிக்கும் விடியோவை பார்த்து, அதற்கு தேவையான இன்ஜக்ட் பிரிண்டரை வாங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அதே போன்று தயார் செய்து உள்ளார். கடந்த சில நாட்களாக, அந்த பகுதியில் கள்ள நோட்டு உலா வருவதை அறிந்த போலீசார் கண்காணிப்பில் தீவிரம் அடைந்தனர். அப்படி ஒரு மாலை நேரத்தில் தான், கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் இந்த ரூபாய் நோட்டை மாற்றும் போது சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார் பரணி குமாரி 

இவரிடம் இருந்து கள்ளநோட்டானா 33 இரண்டாயிரம் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, பரணிகுமாரி மீது வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்