Yoga Therapy: நாள்பட்ட நோய்களை விரட்டும் யோகா தெரப்பி! சென்னையில் புதிய 'சவுண்ட் ஹீலிங்' முறை அறிமுகம்!

Published : Jun 21, 2026, 03:40 PM IST
Yoga day

சுருக்கம்

யோகதத்வா அமைப்பின் நிறுவனர் பத்மா பிரியதர்ஷினி, மன உளைச்சல் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா தெரப்பி ஒரு முக்கிய தீர்வாக அமைகிறது. இந்த ஆண்டு, அக்குபஞ்சர், ஆயுர்வேதம் போன்றவற்றுடன் 'சவுண்ட் ஹீலிங்' முறையையும் அறிமுகப்படுத்துவதாகவும், இது உடல், மனம், ஆன்மாவை சீராக்கி நிம்மதியைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தரும் யோகா கலையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவின்படி 2014-ம் ஆண்டு ஐநா சபையால் இந்த தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2015 ஜூன் 21 முதல் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து இதனைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றன.

இதையொட்டி யோகதத்வா அமைப்பின் நிறுவனர் பத்மா பிரியதர்ஷினி சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது: மன உளைச்சலில் இருப்பவர்கள், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவர்கள், உடல் வலி இருப்பவர்களுக்கு அது நாள்பட்ட நோயாக மாறுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு யோகா தெரப்பி முக்கியமானதாக இருக்கிறது.

Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!

யோகா தெரப்பியில் அக்குபஞ்சர், ஆயுர்வேதா ஹோமியோபதி, தியானம் மட்டுமில்லாமல் சவுண்ட் ஹீலிங் முறையையும் இம்முறை அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் வலியிலிருந்து முற்றிலும் விடுபட யோகதத்வாவை அணுகலாம்.

யோகா தெரப்பி மூலம் உடல், மனம், ஆன்மா ஆகியவை சீராகி நிம்மதியான உணர்வைப் பெற முடியும். நாள்பட்ட வியாதியில் இருப்பவர்கள், சுவாசப் பிரச்சனை உடையவர்களுக்கு சவுண்ட் ஹீலிங் தெரப்பி நிச்சயம் மாற்றத்தைக் கொடுக்கும் என யோகா நிபுணர் பத்மா பிரியதர்ஷினி தெரிவித்தார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Fridge: இந்த 5 பொருட்களை மறந்தும் ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.! மீறினால் விஷமாக மாறுமாம்.!
ஃபிரிட்ஜில் கறிவேப்பிலை சீக்கிரம் கறுத்துப்போகுதா? மாசக்கணக்கில் ஃப்ரெஷ்ஷா வைக்க சூப்பர் டிப்ஸ்!