உடல் எடையை குறைக்க இந்த ஒரு யோகா செய்தால் போதுமானது...மிக எளிதானதும் கூட..!

Published : Oct 21, 2019, 06:44 PM IST
உடல் எடையை குறைக்க இந்த ஒரு யோகா செய்தால் போதுமானது...மிக எளிதானதும் கூட..!

சுருக்கம்

பொதுவாக யோகா செய்வதால் புத்துணர்ச்சி பெற முடியும். காரணம் நம்முடைய மனம் மிகவும் லேசாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். சுவாசம் மிக எளிதாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க இந்த ஒரு யோகா செய்தால் போதுமானது...மிக எளிதானதும் கூட..! 

நம் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தும் ஒரு விஷயம் என்றால் யோகா. இன்றைய காலக்கட்டத்தில் யோகா நம் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே... அதில் குறிப்பாக உடல் எடை குறைப்பதற்கு உடற்பயிற்சியை விட யோகா எந்த அளவிற்கு முக்கியம் என்பதை பார்க்கலாம். 

பொதுவாக யோகா செய்வதால் புத்துணர்ச்சி பெற முடியும். காரணம் நம்முடைய மனம் மிகவும் லேசாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். சுவாசம் மிக எளிதாக இருக்கும். எனவே எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி சாதாரணமாக ஆரோக்கியமாக இருப்பதற்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சூரியநமஸ்காரம்.

யோகாவில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது சூரிய நமஸ்காரம்.. காரணம் சூரிய நமஸ்காரத்தில் வரும் 12 ஸ்டெப்ஸ் செய்தாலே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உணரவைக்கும்.

சூரிய நமஸ்காரம் செய்யும் போது கழுத்து பகுதி, தோள்பட்டை, முதுகு, எலும்பு, கை கால், பின் முதுகு பகுதி என அனைத்து பகுதிகளும் உறுப்புகளும் வலுப்பெறும்,  சீராக செயல்படவும் தொடங்கிவிடும். எனவே யோகா மூலம் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி பொதுவான பலனைப் பெறுவதற்கு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. 

இதற்கு அடுத்தபடியாக "வாரியர் போஸ்"..!

உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமே இந்த போஸ் மிகவும் உறுதுணையாக இருக்கும்... இதனை சேயும் போது, வாயை தொடந்து மூச்சை நன்கு உள்ளிழுத்து, பின்னர் மீண்டும் வாயை திறந்து வாயுவை வெளியேற்ற வேண்டும். இந்த முறைக்கு பெயர் உஜ்ஜாயி பிரீத்... இதனை தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறையும்.   

போ போஸ்..! 

இந்த முறையில் யோகா செய்தால் கை கால்கள் நன்கு வலுப்பெறும். மேலும் ஆங்கில் போஸ், சேர் போஸ் என அடுத்தடுத்த  முறைகள் உள்ளது. இத்தனையும் செய்து வந்தால் மிக எளிதில்  உடல் எடை குறையும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்